இந்தியாவில் இலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் :- உலக அளவில் அதிவேக இணைய சேவையை வழங்கும் இலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் மும்பை,பூனா மற்றும் இந்தூரில் முக்கிய இணைப்பு முனையத்தை நிறுவுகிறது
இலான் மஸ்கின் இந்த புதிய வழிமுறை இணைய சேவை வினாடிக்கு ஒரு டெராபைட் தரவிறக்கம் செய்யும் உறுதியுடன் களமிறங்குகிறது.
இதனை அந்த நிறுவனம் சாதிக்கு மும்முனை முனையத்தை நிறுவி அரசு கட்டுப்பாட்டு விரிவாக்கத்திற்கான ஒப்புதலுக்கு காத்திருக்கிறது.
நீண்ட நெடும் காலமாக இந்தியாவில் தனது தொழிலை விருத்தி செய்ய இயலாமல் இருந்த இலான் மஸ்க் தற்சமயம் அமெரிக்காவை ஆளும் ட்ரம்பின் உதவியுடன் இதனை சாதிக்கிறார் என்று சந்தை நிலவரங்கள் கூறுகின்றன
நீண்ட காலமாக உள்ளூர் கட்டணங்களை எக்காரணம் கொண்டும் மாற்றி அமைக்க முடியாது என தெரிவித்து வந்த இந்திய அரசு தற்சமயம் இலான் மஸ்கின் கார் நிறுவனம் இந்தியாவில் சேவையை தொடங்க ஒப்புதல் அளிக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தை நிலவரத்தை ஒட்டி ,இந்த புதிய இணைய உக்தி தொடங்க பட்டால் அது இலான் மஸ்கின் வெற்றியாகவே பார்க்கப்படும்
ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு நாடு முழுவதும் சில்லறை மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்று அந்த நிறுவனத்தின் வல்லுநர் குழு இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்தது
யூடெல்சாட்-ஒன்வெப் மற்றும் ஜியோ-எஸ்இஎஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த புதிய இணைய வசதியை நேரடியாக இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்ல முடியும் என்று இந்த நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது