எடர்னலின் (Eternal Limited) உணவு விநியோக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரின்ஷுல் சந்திரா ராஜினாமா செய்தார்
எடர்னலின் லிமிடெட் (ஜொமாட்டோ) தனது உணவு ஆர்டர் மற்றும் விநியோக வணிக நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி CEO ரின்ஷுல் சந்திரா ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தின் மூத்த நிர்வாகத்தின் முக்கிய உறுப்பினரான சந்திரா ஏப்ரல் 5 ஆம் தேதி தனது ராஜினாமாவை வழங்கினார், ஏப்ரல் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவி விலகுவார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது .
ஜொமாட்டோ நிறுவனம் பங்குச் சந்தைகளுக்கு (SEBI)தாக்கல் செய்த தகவலின்படி, சந்திரா தனது வளர்ந்து வரும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை இலக்கு காரணங்களுக்காக தங்களது நிறுவனத்தில் இருந்து ராஜினாமா செய்கிறார் என்றும் ஜொமாட்டோ நிறுவனம் தெரிவித்து உள்ளது .
ஜொமாட்டோ நிறுவனதின் பங்கு விலை கடந்த வார இறுதி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை அன்று (4/4/2025) 210.46 இல் முடிவடைந்தது ,பங்கு சந்தைகளின் வார விடுமுறையில் இந்த புதிய செய்தி வந்திருப்பதால் திங்கள்கிழமை அன்று ஜொமாட்டோ நிறுவனதின் பங்கு விலை மிக பெரிய வீழ்ச்சியை சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இருந்த போதிலும் 300 ரூபாயில் இருந்து தொடர்ந்து சரிந்து வந்த ஜொமாட்டோ நிறுவனதின் பங்கு விலை இந்த புதிய செய்திக்கு பின் மீண்டும் பழைய இடத்தை அடைய புதிய முயற்சிகளை அந்த நிறுவனம் எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
முன்னதாக சந்திரன் 2018 இல் தயாரிப்பு உதவி துணைத் தலைவராக ஜொமாட்டோவில் (இப்போது எடர்னல்) சேர்ந்தார், மேலும் படிப்படியாக பதவி உயர்வு பெற்று, துணைத் தலைவராகவும், வணிகத் தலைவராகவும் பணியாற்றினார், சிறப்பான செயல்பாடுகள் மற்றும் நம்பிக்கையின் காரணமாக உணவு விநியோகப் பிரிவின் தலைமை இயக்க அதிகாரியாகப் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில் எடர்னல் லிமிடெட் இன்னும் சந்திராவுக்கு மாற்றாக யாரையாவது அறிவிக்கவில்லை .அவ்வாறு புதிய மாற்று தலைமை அதிகாரி நியமிக்கப்படும்போது அது பங்கு சந்தையில் எந்த விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்கு சந்தை நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பங்கு சந்தையில் முக்கிய நிறுவனமான ஜொமாட்டோவில் பெருமளவிலான பணிநீக்கங்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஊடக அறிக்கைகளின்படி, நிறுவனம் சுமார் 600 வாடிக்கையாளர் ஆதரவு கூட்டாளிகளை பணியமர்த்திய ஒரு வருடத்திற்குள் பணிநீக்கம் செய்தது இந்த நிறுவனத்தை கட்டுக்கோப்பான வழியில் செலுத்தியது என்றும் கூறப்படுகிறது .
பங்கு சந்தையில் ஜொமாடோ என்ற நிறுவன பெயரிலேயே செயல்பட்டு வந்த இந்த நிறுவனம் சமீபத்தில் தன்னை எண்டர்னல் என மறுபெயரிட்டது, இது ஜொமாடோ, பிளிங்கிட், டிஸ்ட்ரிக்ட் மற்றும் ஹைப்பர்ப்யூர் ஆகிய நான்கு முக்கிய வணிகங்களை உள்ளடக்கியது.