3 விழுக்காடு உயர்ந்த HDFC வங்கியின் பங்குகள் (04.04.2025) – பங்குச்சந்தை இன்று :-சமீபத்தில் வெளியிடப்பட்ட நான்காவது காலாண்டின் ரிசல்ட்டை தொடர்ந்து HDFC வங்கியின் பங்குகள் 3% உயர்ந்துள்ளன, இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் விதத்தில் நம்பகமான தரகு நிறுவனம் என்ற நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதால் இந்த உயர்வு என கருதப்படுகிறது.
செய்தி ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் மார்ச் 2025 உடன் முடிவடைந்த காலாண்டில் HDFC வங்கியின் சில்லறை கடன்கள் 9 சதவீதம் அதிகரித்தன என்றும் , அதே நேரத்தில் வணிக மற்றும் கிராமப்புற வங்கி கடன்கள் 12.8 சதவீதம் உயர்ந்தன என்றும் தங்களது பங்கு தாரர்களுக்கு தெரிவிக்க பட்டுஇருந்தது .
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான HDFC வங்கி லிமிடெட்டின் பங்குகள் ஏப்ரல் 4 வெள்ளியாகிய இன்று பரபரப்பான சூழ்நிலையில் அனைத்துவிதமான பங்கு வர்த்தகர்களுக்கு பிரகாசமான இடமாக காணப்பட்டது , ஏனெனில் மார்ச் 31, 2025 உடன் முடிவடைந்த காலாண்டிற்கான நேர்மறையான வணிக தணிக்கை செய்தி வங்கியின் பங்கு மூன்று சதவீதம் உயர உறுதுணையாக இருந்தது .
இன்று காலை 12 மணிக்கு, HDFC வங்கியின் பங்குகள் ஒரு பங்குக்கு ரூ.1,827 க்கு வர்த்தகம் செய்யப்பட்டன, இது முந்தைய பங்கு சந்தை வர்த்தக தினத்தில் இறுதி விலையுடன் ஒப்பிடும்போது மும்பை பங்கு சந்தையான BSE இல் 2.05 சதவீதம் அதிகமாகும்.
மார்ச் 3 அன்று பரிமாற்ற தாக்கல் செய்த தணிக்கை தகவலின்படி, HDFC வங்கி மொத்த முன்பணங்களில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 5.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து, சென்ற நிதியாண்டு 25 ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.26.4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. அதே காலகட்டத்தில் இன்னும் ஒரு நல்ல செய்தியாக வைப்புத்தொகைகள் 15.8 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து ₹25.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் தணிக்கை செய்தியில் வங்கியின் நடப்புக் கணக்கு-சேமிப்புக் கணக்கு (CASA) வைப்புத்தொகைகள் ஆண்டுக்கு ஆண்டு 5.7 சதவீதம் அதிகரித்து ரூ.8.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்க பட்டுள்ளது .
வங்கியின் சில்லறை கடன்கள் 9 சதவீதம் அதிகரித்து, வணிக மற்றும் கிராமப்புற வங்கிக் கடன்கள் 12.8 சதவீதம் உயர்ந்துள்ளன. இருப்பினும், முந்தைய ஆண்டை விட நிறுவனக் கடன்கள் 3.6 சதவீதம் குறைந்துள்ளன என்ற தகவலையும் அந்த தகவல் தணிக்கை அறிக்கை வெளியிடப்பட்டது .
HDFC வங்கி தொடர்ச்சியாக, அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் ரூ.25.4 லட்சம் கோடியிலிருந்து மொத்த முன்பணங்கள் 4 சதவீதம் உயர்ந்துள்ளன என்ற செய்தியை பத்திரிக்கை வெளியீட்டில் தெரிவித்ததும் ஒரு முக்கிய காரணியாக இந்த பங்கு விலை உயர்வுக்கு சொல்லப்படுகிறது ,
இருந்த போதிலும் இந்திய பங்கு சந்தை வங்கி பங்குகளில் மிகவும் உயர்ந்த பங்கு இடம் என்று இடம் பெற முடியவில்லை ,வைப்புத்தொகைகள் அதே காலகட்டத்தில் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளன. கடன் வழங்குபவரின் நிர்வாகத்தின் கீழ் சராசரி முன்பணங்கள் Q4FY25 இல் ரூ.26.95 லட்சம் கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 7 சதவீததிற்கும் அதிகமான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.