Editor's PicksStock Market

300 பாய்ன்ட் அதிகரித்த நிப்ட்டி 50 மீளும் பங்கு சந்தை

300 பாய்ன்ட் அதிகரித்த நிப்ட்டி 50 மீளும் பங்கு சந்தை :- தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்த இந்திய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 சென்ற வார முடிவில் இருந்து இன்று 300 புள்ளிகள் உயர்ந்துள்ளது

மெட்டல் மற்றும் ஆட்டோ துறைகளில் முன்னணியில் உள்ள நிறுவனங்களின் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவிற்று உயர்ந்தது இதற்கான காரணமாக கூறப்படுகிறது

மும்பை பங்கு சந்தையின் குறியீடுகளும் இன்று சொல்லத்தக்க வண்ணம் உயர்ந்து காணப்பட்டது

இன்று 18.03.2025 செவ்வாய்க்கிழமை தொடக்கத்தில் இருந்து கேப் அப் நிலையில் தொடங்கிய பங்குச்சந்தை குறியீடுகள் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே இருந்தது பங்கு சந்தை ஆர்வலர்களையும் சில்லறை முதலீட்டாளர்களையும் மகிழ்ச்சி கொள்ள செய்தது

நிஃப்டி 50 22848

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 50 தொடர்ந்து உயர்ந்து 22848.75 இல் பங்கு சந்தை முடிவு நேரமான 3.30 இல் முடிவடைந்தது, நிஃப்டி 50 குறியீட்டில் அடங்கியுள்ள 50 நிறுவனங்களில் பெருவாரியான நிறுவனங்கள் இன்று இலாபத்தை நோக்கிய பயணம் செய்தன ,இருந்த போதிலும் இரும்பு ,மெட்டல் மற்றும் ஆட்டோமொபைல் பங்குகள் தங்களுக்கான குறியீடுகளை உயர்த்துவதில் பெரும் பங்கு வகித்தன.

நிஃப்டி பேங்க் 49383.80

மற்றோரு முக்கிய தேசிய பங்கு சந்தை குறியீடான பேங்க் நிஃப்டி 48700 புள்ளிகள் என்ற கேப் அப் என்ற நிலையில் துவங்கி தொடர்ந்து ஏறு முகத்தில் பயணித்து 49383.80 என்ற நிலையில் முடிவடைந்தது .தினசரி முதலீட்டு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள் ,மற்றும் குறைந்த கால முதலீட்டு வர்த்தகம் செய்யும் வர்த்தகர்களும் அதீத லாபம் இன்று அடைந்திருப்பர் என்று நம்பப்படுகிறது

சென்செஸ் எக்ஸ்பெயரி தினம்

மாறுதலுக்கு உட்பட்டு செவ்வாய் கிழமைகளில் வார எக்ஸ்பெயரி கொண்டுள்ள சென்செஸ் தொடர்ந்து ஒரே திசையில் பயணித்தது தினசரி வணிகத்தில் குறைந்த பணத்தில் அதிக எண்ணிக்கை ஆப்சன் வியாபாரம் செய்பவர்களுக்கும் இன்று நல்ல இலாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன

Related posts

USTR கருத்து குறித்து LIC புதிய விளக்கம் :யாரிடம் இருந்தும் சிறந்த அந்தஸ்து கிடைக்கவில்லை

R.P.Sundar

பங்குச் சந்தை இன்று : 52 வார உச்சத்தை எட்டி பஜாஜ் ஃபைனான்ஸ், முத்தூட் ஃபைனான்ஸ், ஐடிசி ஹோட்டல்கள் பங்குகள் சாதனை

R.P.Sundar

யூகோ வங்கி: நான்காம் காலாண்டில் வணிகம் 14% வளர்ச்சி, உள்நாட்டு கடன்கள் 20% உயர்வு-52 வார குறைந்த விலைக்கும் கீழே வர்த்தகம்

R.P.Sundar